மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்: பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி தமிழக மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் சார்பில், திண்டுக்கல் கல்லறைத்தோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலத்தலைவர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். பொதுசெயலாளர் புதியவன் பொருளாளர் ரங்கராஜ் பேசினர். நிர்வாகிகள் சுதர்சன், சிவககுமார், பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.