உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குவாரி விதிமீறல்: ஐகோர்ட்டில் வழக்கு

குவாரி விதிமீறல்: ஐகோர்ட்டில் வழக்கு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி ராமகிருஷ்ணன். இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: திண்டுக்கல் மேற்கு, நிலக்கோட்டை, ஆத்துார் தாலுகாக்களில் சட்டவிரோதமாக குவாரி நடத்தப்படுகிறது. கோலப்பட்டி, தென்னப்பட்டி, பெரும்புள்ளி, பாடியூர், நத்தம்பட்டி, சிந்துவார்பட்டி, வி.புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் முருகவேல் ஆஜரானார். நீதிபதிகள் வருவாய்த்துறை செயலர், கனிமவளத்துறை கமிஷனர், கலெக்டர் நவ., 25 ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி