வெறிநோய் தடுப்பூசி முகாம்
சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே தவசிமடையில் கால்நடை டாக்டர் பிரபாகரன், உதவியாளர் லோகேஷ்,கால்நடைத்துறை பணியாளர்கள் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசிபோடும் பணியினை மேற்கொண்டனர். சுகாதார ஆய்வாளர்கள் முனியப்பன், திருப்பதி, நவீன், ஊராட்சி செயலாளர் தங்கவேல், சுகாதார பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.