உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மழையின்றி காயும் மக்காச்சோள பயிர்கள்: விவசாயிகள் கவலை

மழையின்றி காயும் மக்காச்சோள பயிர்கள்: விவசாயிகள் கவலை

ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் மக்காச்சோள கதிர் பால் பிடிக்கும் பருவத்தில், போதிய மழையின்றி செடிகள் காய்ந்து சரிய துவங்கியுள்ளன. போதிய மழையின்மை, தண்ணீர் பற்றாக்குறை, கொளுத்தும் வெயிலால் இப்பகுதியில் வழக்கமான சாகுபடி தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வருகிறது. வெங்காயம், பயறு வகை, கொத்தமல்லி, சூரியகாந்தி, எள், பருத்தி சாகுபடி குறைந்தது. மக்காச்சோள சாகுபடி அதிகரிக்க துவங்கியபோதும், கடந்த சில ஆண்டுகளாக மகசூல் பாதிப்பு, விலை குறைவு பிரச்னைகள் உள்ளன. சில வாரங்களுக்கு முன் பெய்த சாரல் மழையை நம்பி கரிசல்பட்டி, குட்டத்துப்பட்டி, வட்டப்பாறை, கசவனம்பட்டி, வண்ணம்பட்டி வீரக்கல், எஸ்.பாறைப்பட்டி, சுரக்காய்பட்டி பகுதியில் பரவலாக சாகுபடி அதிகரித்துள்ளது. தற்போது கதிர்மணிகள் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளன. இருப்பினும் குறிப்பிடத்தக்க மழை இல்லை. படைப்புழு தாக்குதல், சொங்குப்புல், களை பாதிப்பு போன்ற பிரச்னைகள் அடுத்தடுத்து விவசாயிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. போதிய மழை இல்லாததன் எதிரொலியாக சில நாட்களாக பரவலாக கதிர் மணிகள் வளர்ச்சி பாதித்து செடிகள் காய்ந்து சரிய துவங்கியுள்ளன. விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘கடந்த வாரம் முதல் பனிப்பொழிவு அதிகரித்த போதும் வளர்நிலை பாதித்த செடிகள் அடுத்தடுத்து சரிந்து விழும் நிலையில் உள்ளன. சாகுபடி செலவினத்தை மீட்க முடியாத கவலை ஏற்பட்டுள்ளது’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !