உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மேக மூட்டத்துடன் போக்கு காட்டும் மழை

மேக மூட்டத்துடன் போக்கு காட்டும் மழை

ஒட்டன்சத்திரம், செப்.12- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அக்னி நட்சத்திரம் காலம் போல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் வேளாண் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புதிதாக வேளாண் பணிகள் எதுவும் நடக்கவில்லை. பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை காணப்படுகிறது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் பகல் வேளையில் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேகம் இருண்டு மழை வருவது போல் தோற்றம் அளித்தது. அடிக்கடி இடி மின்னல் ஏற்பட்டும் மழை மட்டும் இல்லை.‌ இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை