உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ரம்ஜான் நோன்பு துவக்கம்

 ரம்ஜான் நோன்பு துவக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பள்ளிவாசல்களில் புனித ரம்ஜான் மாத துவக்கத்தை முன்னிட்டு நோன்பு துவக்கும் நிகழ்ச்சி நடந்தது. திண்டுக்கல் மாநகரில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. இதில் நேற்று அதிகாலை 5:05 மணிக்கு புனித ரம்ஜான் மாதப் பிறப்பை முன்னிட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. திண்டுக்கல் பெரிய பள்ளி வாசலில் தலைமை ஜமாத்தார்கள் முன்னிலையில் இமாம் ரபீக் முகமது தலைமையில் தொழுகை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று நோன்பு துவக்கினர். மாலை 6:34 மணிக்கு நோன்பு கஞ்சி அருந்தி தொழுகையை நிறைவு செய்து ஈகை நடவடிக்கைகள் குறித்து இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை