வாசகர்கள் கருத்துகள் ( 1 )
JeevaKiran
டிச 06, 2024 18:36
உண்மையிலேயே இவர்களை போன்றோர்கள் வனத்துறையில் பணியில் அமர்த்தினால் வனமும், வன விலங்குகளும் அமோகமாக வாழும்.
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அடிபட்டு ஆபத்தான நிலையில் தெருக்களில் சுற்றித்திரிந்த அபூர்வ ஆந்தை மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.திண்டுக்கல் கோவிந்தாபுரம் நாயக்கர் புது தெரு பகுதியில் உடலில் காயமடைந்த நிலையில் அபூர்வ வகை ஆந்தை ஒன்று சுற்றித்திரிந்தது. அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் திண்டுக்கல் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். புனித்ராஜ் தலைமையிலான வீரர்கள் காயமடைந்த ஆந்தையை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஆந்தைக்கு சிகிச்சை கொடுத்த நிலையில் வனப்பகுதிக்குள் விட்டனர்.
உண்மையிலேயே இவர்களை போன்றோர்கள் வனத்துறையில் பணியில் அமர்த்தினால் வனமும், வன விலங்குகளும் அமோகமாக வாழும்.