உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அனுமதியற்ற விளம்பர பலகைகள் அகற்றம்

அனுமதியற்ற விளம்பர பலகைகள் அகற்றம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் பிரேம் ஆனந்த் உத்தரவின்படி அனுமதியின்றி வைக்கப்பட்ட நிரந்தர விளம்பரப் பலகைகளை அகற்றும் பணி இன்று (நவ.,4) நடந்தது. அதன்படி நகரின் முக்கிய ரோடுகள், சந்திப்புகள், கட்டடங்களின் கூரைகளில் உரிய அனுமதி இன்றியும், கட்டமைப்பு உறுதிச்சான்று இல்லாமலும் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளை கண்டறிந்து நகரமைப்பு பிரவு அதிகாரிகள், பணியாளர்கள் அகற்றினர். விளம்பரப் பலகைகள் வைக்க விரும்புவோர் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், விதிகளின் கீழ் மாநகராட்சியிடம் உரிய முன் அனுமதி பெற்ற பின்னர் வைக்க வேண்டும். விதிமுறைகளை மீறி அமைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விளம்பரப் பலகைகளை அகற்றும் செலவு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !