மேலும் செய்திகள்
இ - சேவா மையம் திறப்பு
28-Sep-2024
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் ஓய்வு பி.டி.ஓ., வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை , ரூ.25 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.ஒட்டன்சத்திரம் நகராட்சி பழநிக்கவுண்டன்புதுாரை சேர்ந்தவர் ஓய்வு பி.டி.ஓ., தண்டபாணி 64. மனைவி தனலட்சுமி உடன் செப்.26 ல் ஓசூரில் உள்ள மகளை பார்ப்பதற்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக அருகில் உள்ளோர் அவருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 6 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் கொள்ளையடித்தது தெரிந்தது. திண்டுக்கல் தடவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Sep-2024