உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓய்வு வி.ஏ.ஓ., கொலை: 17 வயது சிறுவன் கைது

ஓய்வு வி.ஏ.ஓ., கொலை: 17 வயது சிறுவன் கைது

வேடசந்துார்: வேடசந்துார் அருகே ஓய்வு வி.ஏ.ஓ.,வை கொலை செய்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். புளியமரத்துக்கோட்டையை சேர்ந்தவர் ஓய்வு வி.ஏ.ஓ., மாரியப்பன் 70. ஏப்.11ம் தேதி வீட்டில் இறந்து கிடந்தார். இவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக வேடசந்துார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புதைத்த உடலை தோண்டி எடுத்து மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் விசாரணையில் மாரியப்பன் தோட்டத்தில் வேலை செய்த 17 வயது சிறுவன் நகைக்காக மாரியப்பனை கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சிறுவனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ