மேலும் செய்திகள்
துாய்மை விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
08-Oct-2026
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
28-Sep-2026
நத்தம்: நத்தம் அரசு கலை அறிவியல் கல்லுாரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் சந்திரா தலைமை வகித்தார். சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ராமநாராயணன், தமிழ்த்துறை கவுரவ விரிவுரையாளர் முத்தையா முன்னிலை வகித்தனர். போலீஸ் எஸ்.ஐ., அபினேஷ் பங்கேற்று சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். தொடர்ந்து நடந்த ஊர்வலத்தில் சாலை விதிகளை பின்பற்றுவோம், பாதுகாப்பாக சாலையில் செல்வோம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவர்கள் சென்றனர். கல்லுாரியில் தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லுாரியில் நிறைவடைந்தது. பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
08-Oct-2026
28-Sep-2026