மேலும் செய்திகள்
சாலை மைய தடுப்புச்சுவர் மீண்டும் அமைக்கப்படுமா?
22-Jun-2025
வடமதுரை : அய்யலுாரில் ரோடு பிரிவில் விபத்து அச்சத்துடன் இருக்கும் திறந்த வெளி கிணறால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.அய்யலுார் எரியோடு ரோட்டில் வேங்கனுார் அருகில் வடுகபட்டிக்கு ரோடு பிரிகிறது. இதன் வழியே பாண்டியனுார், தோப்புப்பட்டி, பூவன்களம், பாலக்குறிச்சி, வடுகபட்டி என பல கிராம மக்கள் பயணிக்கின்றனர். இப்பகுதியில் ரோடு பிரிவு இடத்திலே ரோட்டையொட்டி திறந்தவெளி கிணறு உள்ளது. இங்கு விபத்து ஆபத்தை தடுக்கும் நோக்கில் தடுப்புச்சுவர் கட்டி உள்ளனர். ஆனால் என்ன காரணத்தாலோ ரோடு மட்டத்துடன் தடுப்புச்சுவர் நிற்பதால் விபத்து அபாயத்திற்கு முடிவு ஏற்படாமல் உள்ளது. --தேவை தடுப்பு சுவர்
ஏ.எம்.ராஜரத்தினம், காங்., வட்டாரத் தலைவர், கொம்பேறிபட்டி: சித்துவார்பட்டி, கொம்பேறிபட்டி ஊராட்சிகளை சேர்ந்த பல கிராம மக்கள் அய்யலுார் வந்து செல்ல பிரதான வழித்தடமாக இந்த ரோடு உள்ளது. அய்யலுார் மதுக்கடையும் எரியோடு ரோட்டில் இருப்பதால் சுக்காம்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் அதிகளவில் இவ்வழியே வந்து செல்கின்றனர். போக்குவரத்து அதிகமுள்ள இந்த ரோட்டில் உள்ள கிணற்றில் தடுப்புச்சுவர் கட்டி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். -உயரத்தை அதிகரியுங்க
பி.ராமசாமி, விவசாயி, வைர பிள்ளைப்பட்டி: தடுப்புச்சுவர் இல்லாத கிணறு குறித்து நீண்ட ஆண்டுகளாக மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து ரோட்டில் மண் சரிவு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தடுப்புச்சுவர் கட்டி உள்ளனர். இந்த தடுப்புச்சுவர் வாகனங்கள் தவறி விழுந்து விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் இல்லை. மழைக்காலத்தில் செடிகள் வளர்ந்து விடுவதால் இப்படி ஒரு ஆபத்து இருப்பது கூட வெளியே தெரியாத சூழல் உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து தடுப்புச்சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். -நடவடிக்கை எடுக்கப்படும்
ஆர்.கருப்பன், பேரூராட்சி தலைவர் (தி.மு.க.,), அய்யலுார்: கிணறு அருகில் செல்லும் ரோடு பகுதி பேரூராட்சி எல்லைக்குள் வருகிறது. ஆனாலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் வடமதுரை ஊராட்சி ஒன்றிய நிர்வாக கட்டுப்பாட்டில் ரோடு அமைத்து தடுப்புச்சுவரும் கட்டி உள்ளனர். தடுப்புச்சுவரின் உயரத்தை மேலும் 3 அடி உயர்த்தியிருந்தால் போதும். ஆனால் தரை மட்டத்தில் விட்டுள்ளனர். தற்போது இந்த ரோடு உட்பட பல ரோடுகளை நெடுஞ்சாலை கட்டுப்பாட்டிற்கு மாற்ற ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதுகுறித்து தொடர்புடைய துறைகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
22-Jun-2025