மேலும் செய்திகள்
விபத்தில் காயம்
31-Oct-2024
வடமதுரை ; திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.1.45 லட்சம், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள ஜவுளிகளை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.வடமதுரை அருகே வேல்வார்கோட்டை கொட்டத்துறையைச் சேர்ந்தவர் சீதா. இவர் வடமதுரை- திண்டுக்கல் நான்குவழிச்சாலை ஓரமுள்ள ஆண்டிமாநகரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு கொள்ளையர்கள் அருகில் இருந்து வீடுகளின் வெளிப்புற கேட்களை 'லாக்' செய்துள்ளனர். பின் ஜவுளிக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையர்கள் ரூ.1.45 லட்சம், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள ஜவுளிகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வடமதுரை போலீசார் இதில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
31-Oct-2024