போலீசில் காதல் ஜோடி தஞ்சம்
சாணார்பட்டி:திண்டுக்கல் வேடபட்டியை சேர்ந்தவர் அர்ஜூன் 22.இவர் கோபால்பட்டி தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவரும் கொல்ராம்பட்டி பகுதியை சேர்ந்த காவ்யா 22, காதலித்து வந்தனர். பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேடப்பட்டி பகுதி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பாதுகாப்பு கேட்டு சாணார்பட்டி மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, எஸ்.ஐ., பிரதீபா இருவரின் பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதலன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.