ராயல் ஓக் பர்னிச்சர் கடை திறப்பு விழா
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ராயல் ஓக் இன் கார்ப்ரேஷன் பிரைவேட் லிமிடெட்டின் மறுசீரமைப்பு கிளை திறக்கப்பட்டது. தலைவர் விஜய் சுப்பிரமணியம், நிர்வாக இயக்குனர் மதன் சுப்பிரமணியம் கலந்துகொண்டனர்.திறப்புவிழாவில் ராயல் ஓக் பிரான்சைஸ் தலைவர் கிரண் சபாரியா, வி.எம்., என்.எஸ்.ஓ., தலைவர் தம்மையா கோடேரா, ராயல் ஓக் பிரான்சைஸ் பிராந்தியத்தலைவர் ரஞ்சித் ஆகியோர் கலந்துக்கொண்டனர். நிறுவனத்தலைவர் விஜய் சுப்பிரமணியம் பேசுகையில், '1200 சதுர அடியில் வரவேற்பறை, படுக்கையறை, உணவகப்பகுதிகள், படிப்பு, அலுவலக வெளிப்புறம், வீட்டு அலங்காரம், மெத்தைகள் என பலவகைகளில் பர்னிச்சர்கள் உள்ளது.வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஸ்டைலில், ஸ்மார்ட்டான நடைமுறை தேவைகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் ேஷாரூம் விரிவாக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, மலேசியா நாடுகளின் தனித்துவமான பர்னிச்சர்கள் தேர்வு செய்யும் 'கன்ட்ரி ஸ்டோர்'ஏற்படுத்தப்பட்டுள்ளது. நவீன ஆடம்பரமான பொருட்களை கையடக்க விலையில் வாங்க முடியும்.ஒரு கோடிக்கும் அதிகமானோர் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்கிறது. இந்தியாவின் அனைத்து மெட்ரோ நகரங்கள், டயர் 2, டயர் 3 நகரங்கள் உள்பட காஷ்மீர் முதல் கன்னியாகுமரி, குஜராத் முதல் நாகலாந்து வரை என நாடு முழுவதும் நாலாபுறமும் 200க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது'என்றார்.