உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரூ.1.89 கோடி பணி பூமி பூஜை

ரூ.1.89 கோடி பணி பூமி பூஜை

வேடசந்துார்: காசிபாளையம் அரசு மாதிரி மேல் நிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் ரூ.ஒரு கோடியே 26 லட்சம் திட்ட மதிப்பில் 5 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. எம்.எல்.ஏ., காந்தி ராஜன் துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அய்யாக்கண்ணு, பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, உதவி தலைமை ஆசிரியர் மயில்வாகனன் பங்கேற்றனர்.தட்டாரப்பட்டி ஊராட்சி திருமாணிக்கனுாரில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.63 லட்சம் திட்ட மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. எம்.எல்.ஏ., காந்தி ராஜன் துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் கவிதா, நிர்வாகிகள் கார்த்திகேயன், ரவிசங்கர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை