உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ரூ.5,000 லஞ்சம்: 2 பேர் கைது

 ரூ.5,000 லஞ்சம்: 2 பேர் கைது

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், பூம்பாறையைச் சேர்ந்தவர் ராஜா. தந்தை இறந்ததால், தன் பெயருக்கு வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய, ஊராட்சி நிர்வாகத்தில் விண்ணப்பித்தார். அதற்கு, ஊராட்சி செயலர் முருகேசன், 58, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் ராஜா சண்முகவேல், 34, ஆகியோர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டனர். லஞ்ச ஒழிப்பு போலீசில் ராஜா புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி, பூம்பாறை ஊராட்சி அலுவலகத்தில் வைத்து முருகேசன், சண்முகவேலிடம், ராஜா பணத்தை கொடுத்தார். போலீசார், இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை