உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊரக வளர்ச்சி சங்க கூட்டம் 

ஊரக வளர்ச்சி சங்க கூட்டம் 

திண்டுக்கல்: தமிழக ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம் தனியார் ஓட்டலில் நடந்தது. மாநில தலைமை ஒருங்கினைப்பாளர் ஜான்போஸ்கோ பிரகாஷ் தலைமை வகித்தார்.அப்போது அவர் பேசியதாவது:40 ஆண்டுகளாக பணிபுரியும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி ஆப்பரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். மாதம் 10 ஆயிரம் ஊதியத்துடன் பணி நிரந்தரம் செய்யவேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறுக்கட்டங்களாக போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை இல்லை. ஆக.23ல் திருச்சியில் நடக்கும் மாநாட்டில் அனைத்து சங்கங்கள் கூடி போராட்டம் நடத்த திட்டம் வகுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை