மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சி சங்க மாநாடு
14-Nov-2024
நத்தம்: -நத்தம் யூனியன் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க வட்டார மாநாடு நடந்தது. வட்டார தலைவர் சுதர்சன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் வீரகடம்பகோபு, மாவட்ட தலைவர் சரவணன், மாவட்ட செயலாளர் மகுடபதி முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் எழில்வளவன் வரவேற்றார். மாநாட்டில் சங்க கொடி ஏற்றப்பட்டு நிர்வாகிகளிடையே வரவு, செலவு கணக்குகள் சம்பந்தமான ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர். வட்டார செயலாளர் உக்கிரபாண்டி, பொருளாளர் சூர்யகுமார் பங்கேற்றனர்.
14-Nov-2024