ஊரக வளர்ச்சித்துறை ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்: துாய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உட்பட 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி பேசினார். அப்போது அவர் ,கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் நவ.24 முதல் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்தம், சென்னை ஊரகவளர்ச்சித்துறை ஆணையர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.