உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் சபரி மஹால் திறப்பு விழா

திண்டுக்கல்லில் சபரி மஹால் திறப்பு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி எஸ்.பி., அலுவலகம் செல்லும் வழியில் சபரி மஹால் திறப்பு விழா, ஸ்ரீ பால கணபதி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.அதிகாலை கணபதி ஹோமத்துடன் சபரி மஹால் திறப்பு விழா நடந்தது. காலை 9:45 மணிக்கு மேல் ஸ்ரீ பால கணபதி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சபரி வாட்டர் பிளான்ட் உரிமையாளர் தர்மராஜ், செட்டிநாயக்கன்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் லதா தர்மராஜ், சபரி, ஸ்ரீ குமரன் ப்ளூ மெட்டல்ஸ் உரிமையாளர் கதிரேசன், முத்தாலம்மன் கந்தசாமி பிள்ளை நினைவு தொண்டு அறக்கட்டளை நிர்வாக இயக்குநர்கள் கதிர்வேல் மணிமேகலை, எஸ்.எஸ்.எஸ்., திருமண மஹால் இயக்குநர் சுரேஷ், எஸ்.கே.,ரெடிமிக்ஸ் கான்கிரீட் இயக்குநர் சிவக்குமார், ஸ்ரீ குமரன் ஃபார்ம் சர்வீஸ் இயக்குநர் பாலச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !