ஜூலை 11ல் பள்ளி சிறார் தடகள போட்டிகள்
நத்தம்: -திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக பள்ளி சிறார்களுக்கான தடகள போட்டிகள் நடக்கிறது.திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக 6, 8, 10, 12 வயதுக்குட்பட்ட பள்ளி சிறுவர்களுக்கான தடகள போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூலை 11 ல் நடைபெற உள்ளது. இதற்கான முன் பதிவுகளை gmail.comமுகவரிக்கு ஜூலை 10 மாலைக்குள் அனுப்ப வேண்டும். ஜூலை 11 காலை 8:00 மணிக்குள் நேரிலும் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். போட்டியன்று திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து காலை 7:30 மணிக்கு பஸ் இயக்கப்படும்.இந்த போட்டிகள் 50,60,300 மீட்டர், நின்று கொண்டு தாவுதல், கிரிக்கெட், டென்னிஸ் பந்து வீசுதல் போன்ற பிரிவுகளில் நடைபெற உள்ளது. ஆதார் நகல் அல்லது பள்ளியில் உறுதியளிக்கும் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர் துரை, செயலாளர் சிவகுமார் தெரிவித்துள்ளனர்.மேலும் விபரங்களுக்கு 99941 33303, 99947 02881 ல் தொடர்பு கொள்ளலாம்.