மேலும் செய்திகள்
குழவி கல்லால் அடித்து முதியவர் படுகொலை
21-Apr-2025
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை கொல்லபட்டியில் டிராக்டர் கவிழ்ந்ததில் பள்ளி மாணவர் பலியானார்.குஜிலியம்பாறை ஆர்.கொல்லப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி பகவதியப்பன் 60. இவரது மகள் கோமதி, மகன்கள் தமிழரசன் 11, சிவரஞ்சன்8, உடன் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். பகவதியப்பன் கூட்டுறவு சொசைட்டிக்கு சொந்தமான டிராக்டரை உழவுக்கு எடுத்து வந்து தோட்டத்தில் நிறுத்தி உள்ளார். பொம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்த பசுபதி 18, டிராக்டரை ஒட்டி உள்ளார். கோமதியின் மகன் தமிழரசன் உட்கார்த்திருந்தார். இவர் கொடைக்கானல் பள்ளி மாணவர். ஆர்.காச்சக்காரன்பட்டி ரோட்டில் சென்ற போது டிராக்டர் ஓடையில் கவிழ்ந்ததில் தமிழரசன் இறந்தார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் விசாரிக்கிறார்.
21-Apr-2025