உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அறிவு திறனை ஊக்கப்படுத்தும் பள்ளிகள்: திறமைகளை வெளி காட்டும் மாணவர்கள்

அறிவு திறனை ஊக்கப்படுத்தும் பள்ளிகள்: திறமைகளை வெளி காட்டும் மாணவர்கள்

திண்டுக்கல்

மாணவர்களின் திறமைகளை மேம்படுத்த அவர்கள் படிக்கும் பள்ளிகளில் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளை அதிகம் நடத்துகின்றனர். இதோடு மாணவர்கள் திறமைகளை கண்டறியும் வகையில் அறிவுத்திறன் கண்காட்சியும் நடத்தப்படுகிறது . இதன் படைப்புகளை முழுக்க மாணவர்களே கண்காட்சியில் காட்சிப்படுத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனர். அதுபோன்ற அறிவுத்திறன் கண்காட்சி திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு வேதாந்திரி மகரிஷி பப்ளிக் பள்ளியில் நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் கூறியதாவது...

அனுபவ படிப்பு உருவாகும்

தாமோதரன்,பள்ளி தாளாளர், திண்டுக்கல்: பள்ளிகளில் நடத்தும் அறிவுத்திறன் கண்காட்சிகள் மாணவர்களின் திறமையை வெளிக்காட்டுவதற்கு நாம் அமைக்கும் ஒரு வாய்ப்பு. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். இதபோன்ற நிகழ்ச்சிகளால் எதிர்காலத்தில் கிடைக்கும் அனுபவங்கள் தற்போதே கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. பெற்றோர்களும் பிள்ளைகளின் திறமைகளை மதிக்க வேண்டும். மாணவர்களின் நலனுக்காக இந்நிகழ்ச்சியை நடத்துகிறோம். தொடர்ந்து இதேபோல் பல நிகழ்ச்சிகளை நடத்துவோம்.

படிப்பு சுமை குறையும்

நளினி,பள்ளி செயலாளர்,திண்டுக்கல்: பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் எப்போதும் படிப்பு படிப்பு என்று இருந்தால் பள்ளிகளுக்கு செல்வதையே குழந்தைகள் வெறுக்க தொடங்கிவிடுவார்கள். அவர்களுக்கு எதில் விருப்பமோ அந்த வழியில் தான் நல்ல கருத்துக்களை தெரிவிக்க முடியும். அறிவுக்கூர்மை என்பது எல்லா மாணவர்களுக்கும் ஒரே போல் இருப்பது இல்லை. ஆனால் பல பயிற்சிகள் மூலம் அதை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற அறிவுத்திறன் கண்காட்சிகள் மூலம் படிப்பு சுமை குறைந்து கற்றுக்கொள்ளும் ஆர்வம் மாணவர்களுக்கு அதிகரிக்கும்.

தன்னம்பிக்கை வளரும்

மலர்விழி ,பள்ளி முதல்வர், திண்டுக்கல்: வீடுகளை விட மாணவர்கள் பள்ளிகளில் தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். இங்கிருந்து தான் எல்லா நல்ல பழக்கங்களும் மாணவர்கள் மனதில் பதிய தொடங்குகிறது. அறிவுத்திறன்களை அதிகரிக்கும் புதிய வழியாக அறிவுத்திறன் கண்காட்சிகள் பள்ளிகளில் நடத்தப்படுகிறது. இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள எல்லா கற்பனை கண்டுபிடிப்புகளும் மாணவர்களே யோசித்து தாமாகவே முயற்சி செய்து எடுத்து வந்துள்ளனர். இதில் எதிர்காலத்திற்கு தேவையான எல்லா கண்டுபிடிப்புகளும் உள்ளது. இவர்களின் திறமைகளை ஊக்குவித்தால் இன்னும் பெரிய கண்டுபிடிப்புகளை எளிதில் கண்டு பிடிப்பதற்கான சக்திகள் உருவாகும். இதுமட்டுமில்லாமல் தனியாக எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் வளரும்.

திறமையை வளர்த்துகொள்ளலாம்

சுரேஷ்குமார்,தொழில்நுட்பவியலாளர்,திண்டுக்கல்: சிறுவயதிலிருந்தே புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கான ஆர்வம் குழந்தைகளுக்கு வருவதன் மூலம் சமூதாயத்தில் வளர்ச்சிகள் ஏற்படும். அறிவுத்திறன் நிகழ்ச்சிகள் குழந்தைகள் மத்தியில் வரவேற்பாக உள்ளது. பல பள்ளிகளிலும் இதேபோல் நடத்தினால் மாணவர்களின் வாழ்வு மேம்படும். திறமையை வளர்த்து கொள்வதில் மாணவர்களுக்கு ஆர்வத்தை துாண்டும் வகையிலான கண்காட்சிகள் நடத்துவதன் மூலம் வருங்காலத்தில் நம் வாழ்க்கை மேம்படும்.

தானாக வரும் ஆர்வம்

விகாஸ்ரீ,மாணவி, திண்டுக்கல்: பள்ளிகளில் நடத்தும் இதுபோன்ற கண்காட்சிகள் எங்களை உற்சாகபடுத்துகிறது. இதனால் பள்ளிக்கு வர வேண்டும் என்ற ஆர்வம் தானாக வருகிறது. இன்னும் பல நிகழ்ச்சிகளை பள்ளி நிர்வாகத்தினர் நடத்த வேண்டும். நாங்களும் ஆர்வமாக பங்கேற்போம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ