ஸ்கூட்டர் திருடியவர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி.,காலனியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி 50. இவர், ஜூன் 20 ம்தேதி ஸ்கூட்டரில் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் நிறுத்தியிருந்தபோது திருடுபோனது. புகாரின் அடிப்படையில் நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் திருடியவர் கரூர் மாவட்டம் காந்திசாலையை சேர்ந்த கவுதம் 36 என தெரிந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், ஸ்கூட்டரை மீட்டனர்.