உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பகலில் தகிக்கும் வெயில்; இரவில் உறைபனி

பகலில் தகிக்கும் வெயில்; இரவில் உறைபனி

செம்பட்டி, : மலையடிவார கிராமங்களில் பகலில் சுட்டெரிக்கும் வெயில், இரவில் உறைபனி தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கன்னிவாடி, செம்பட்டி பகுதியில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளது. சமீபத்திய மழையால் நீராதாரங்களில் ஓரளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இருப்பினும் குறைந்த அளவு நேரம் மட்டுமே விவசாய மும்முனை மின் விநியோகம் நடக்கிறது. போதாக்குறைக்கு அடிக்கடி மின்தடை தாராளமாக தொடர்கிறது. இப்பிரச்னையால் சாகுபடிகள் பணிகள் பாதிப்பதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.இப்பகுதியினர் கூறுகையில், ''நகர்புறத்தை விட மலையடிவார கிராமங்களான தர்மத்துப்பட்டி, கோம்பை, மல்லையாபுரம் அக்கரைப்பட்டி, சித்தரேவு, சித்தையன்கோட்டை, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாலை துவங்கி மறுநாள் காலை வரை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் அதிகளவில் உள்ளது. பருவநிலை மாறுபாட்டால் தொற்று பாதிப்பு பிரச்னைகளும் தொடர்கின்றன. அடிக்கடி முன்னறிவிப்பற்ற மின்தடை தொடர்கிறது. மின்சாதனங்கள் பாதிப்படைவதுடன் குறைந்த அளவு நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்படுவதால் சாகுபடி பணிகள் வெகுவாக பாதிக்கும் அவலம் உள்ளது ' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை