உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கொள்ளை வழக்கில் ஏழு பேர் கைது

 கொள்ளை வழக்கில் ஏழு பேர் கைது

ஆயக்குடி: பழநி ஆயக்குடி பகுதியில் நடந்த நகை கொள்ளையில் தொடர்புடைய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். ஆயக்குடியை சேர்ர்ந்தவர் சித்ரா 35. இவருடன் தோழிகளான ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பிரியா 30 ,திருச்சி இலக்கியா 35 , தங்கி இருந்தனர். மார்ச் 10ல் வீட்டிற்குள் புகுந்த கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ஆறு பவுன் நகையை கொள்ளை அடித்து சென்றது. ஆயக்குடி போலீசார் விசாரணையில் பழநி சாமிநாத புரத்தை சேர்ந்த சசிகுமார் 22, ராஜா 25, மதுரை பாண்டியராஜன் 25, தேனி மாவட்டம் போடி மாரிமுத்து 33, திருச்சி மாவட்டம் சமயபுரம் சிவனேசன் 19, திண்டுக்கல் கண்மணி 36, காமாட்சி 26 ,ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மூன்று டூ வீலர் மூன்று அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை