உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எஸ்.எப்.ஐ., மாநாடு; முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு கண்டனம்

எஸ்.எப்.ஐ., மாநாடு; முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு கண்டனம்

திண்டுக்கல்,: திண்டுக்கல்லில் மாவட்ட எஸ்.எப்.ஐ., மாநாடு நேற்று நடந்தது. இதில் தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டது.திண்டுக்கல் மாவட்ட எஸ்.எப்.ஐ., மாநாடு, சி.ஐ.டி.யு., அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடந்தது. மாவட்டத்தலைவர் நிருபன் தலைமை வகித்தார். சச்சிதானந்தம் எம்.பி., பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில், புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக்கொண்டனர்.மாநாட்டின் ஒருபகுதியாக பேரணி நடந்தது. இஸ்ரேல் அரசு காசா மீது நடத்தும் தாக்குதலுக்கு எதிராகவும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் 'கரம் பதிப்போம்'இயக்கம் துவங்கப்பட்டது.அதன்படி திரைப்பட இயக்குனர் ராம் சந்திரா கைகளில் சாயம் பூசி அதை வெள்ளை துணியில் பதிவு செய்து துவங்கி வைத்தார். அறநிலையத்துறைபணத்தில் கல்லூரிகளை நடத்தலாமா என கேள்வி எழுப்பிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம்,பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும், உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவர் சம்சீர் அகமது உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை