உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வடமதுரையில் சாஸ்தா திருக்கல்யாணம்

வடமதுரையில் சாஸ்தா திருக்கல்யாணம்

வடமதுரை : வடமதுரையில் பை பாஸ் நால் ரோடு சந்திப்பு பகுதியில் நீலிமலை அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் ஐயப்பன் கோயில் கட்டப்படுகிறது. இங்குள்ள தற்காலிக மணிமண்டபத்தில் 5 ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்தாண்டு மண்டல பூஜை விழா டிச.12ல் மஞ்சமாதா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. கணபதி பூஜை, சீர் அழைத்தல், சந்தனக்குடம் கொண்டு வருதல், பூர்ணத்தம்மன், புஷ்கலையம்மனுடன் சாஸ்தா திருக்கல்யாணம், விளக்கு பூஜை, மஞ்சள் மாதாவுக்கு பால்குடம் எடுத்தல் என வழிபாடுகள் நடந்தன. இன்று கன்னிச்சாமிகள் திருவாபரண பெட்டி துாக்குதல், பஜனை, முளைப்பாரி கரைத்தல், கருப்பர் பூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ