உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெரியதுறையான் கோயில் விழாவில் ஆடுகளை பலி கொடுத்து வழிபாடு

பெரியதுறையான் கோயில் விழாவில் ஆடுகளை பலி கொடுத்து வழிபாடு

ஆயக்குடி : பழநி கோம்பை பட்டி பெரியதுரையான் கோயிலில் கருப்பண சுவாமி, செல்வ விநாயகர், தன்னாசியப்பன், போலகருப்பு சன்னதிகள் உள்ளன. இங்கு 44 வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏப். 21 அன்று தீர்த்தக்கலசம் எடுத்து வந்து கோயிலில் சேர்த்தனர். அதன் பின் கருப்பணசுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு தீர்த்தம் செலுத்துதலுடன் அன்னதானம் நடந்தது. நேற்று அதிகாலை 3:00 மணி முதல் கருப்பண்ண சுவாமிக்கு 150க்கு மேற்பட்ட ஆடுகள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன் பின் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன .காலை 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ