உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குப்பை கிடங்கில் புகை; மக்கள் அவதி

குப்பை கிடங்கில் புகை; மக்கள் அவதி

பழநி: பழநி நகராட்சி குப்பை கிடங்கில் தீப்பற்றி புகைமண்டலமாக இருப்பதால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர்.பழநி நகராட்சி குப்பை கிடங்கில் 33 வார்டு குப்பைகளும் கொட்டப்படுகிறது. தைப்பூசத்தால் வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரிக்க குப்பை அதிக அளவில் சேர்ந்தது .இவை அனைத்தும் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு திடீரென தீ பற்றி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புகை அருகிலுள்ள குடியிருப்பு, தக்காளி மார்க்கெட் பகுதியில் பரவ பொதுமக்கள் சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல் ,சுவாச நோய் உள்ளவர்களுக்கு பெரும் அவதியை ஏற்படுத்துகிறது. இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி