திடக்கழிவு தணிக்கை
வடமதுரை: கிராம ஊராட்சிகளில் நிலையான திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை உருவாக்க அடிப்படை தரவுகளை பெறும் நோக்கில் துாய்மை பாரதம் இயக்கம், துாய்மை தமிழகம் பிரைவேட் லிமிடெட் மூலம் 10 மாவட்டங்களில் திடக்கழிவு தணிக்கை நடக்கிறது. இன்று (நவ.,13) வடமதுரை ஒன்றியம் புத்துார் ஊராட்சியில் திடக்கழிவு தணிக்கை நடந்தது. நிறுவன மாநில பிரதிநிதி பிரசன்னா களஆய்வு செய்தார். ஏ.பி.டி.ஓ., சரவணன், தனி அலுவலர் ஜெயசந்திரிகா, துாய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமாநிதி, வட்டார ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி, ஊராட்சி செயலர் கோவிந்தசாமி உடனிருந்தனர்.