உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயில்களில் ஆடிப் பவுர்ணமி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை

பழநி கோயில்களில் ஆடிப் பவுர்ணமி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை

பழநி: பழநி சுற்றுவட்டார பகுதிகளில் அம்மன் கோயில்களில் பவுர்ணமி, ஆடிவெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமை, பவுர்ணமி தினத்தை முன்னிட்டு பெரியநாயகி அம்மனுக்கு விசாலாட்சி அலங்காரம் நடைபெற்றது. கிழக்கு ரத வீதி வீதி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மாலையில் குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. சிவகிரி பட்டி உச்சி காளியம்மன், ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயில், புது தாராபுரம் ரோடு ரணகாளியம்மன், கச்சேரி வீதி கூன காளியம்மன், அ.கலையமுத்தூர், அக்ரஹாரம் கைலாசநாதர் கல்யாணி அம்மன், நெய்க்காரப்பட்டி மண்டுகாளியம்மன், பெரிய கலையமுத்தூர் ஹைகோர்ட் பத்திரகாளி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை