உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசு பள்ளியில் ரூ.3 கோடியில் ஸ்டேடியம்

அரசு பள்ளியில் ரூ.3 கோடியில் ஸ்டேடியம்

எரியோடு : எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஏக்கருக்கு அதிகமாக காலி இடம் உள்ளது. இப்பகுதியே விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்படுகிறது. மழை நேரத்தில் ஓடை நீர் மைதானத்திற்குள் புகுந்து நாள் கணக்கில் தேங்கி சகதியாக மாறிவிடும். தற்போது வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் முயற்சியால் இப்பள்ளியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கத்தை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதில் கபடி, கூடைப்பந்து, கையுந்து பந்து விளையாட்டுகள், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் என மைதானங்கள், பார்வையாளர்கள் அமர கேலரி அமையும் என பள்ளி பி.டி.ஏ., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ