மேலும் செய்திகள்
முதல்வர் கோப்பையில் வென்றவர்களுக்கு பரிசு
19-Sep-2025
திண்டுக்கல் : கல்லுாரி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பைக்கான மாநில பூப்பந்து விளையாட்டு போட்டி தொடங்கியது. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். 38 மாவட்டத்தை சார்ந்த 760 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசுத்தொகை , பதக்கங்கள், சான்றிதழ், கேடயம் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் சீருடைகள், வரவேற்பு கிட்,பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது . மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, தமிழ்நாடு பூப்பந்தாட்ட மாநில துணைத்தலைவர் சீனிவாசன், பி.எஸ்.என்.ஏ,, பொறியியல் கல்லுாரி சேர்மன் ரகுராம், முதல்வர் வாசுதேவன், இணைப்பதிவாளர் விஜய் கலந்து கொண்டனர்.
19-Sep-2025