உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாநில ஹேண்ட்பால் போட்டி

மாநில ஹேண்ட்பால் போட்டி

சின்னாளபட்டி: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் 2024- -25ம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகளில் தேனி மாவட்டம் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர் ஹேண்ட்பால் போட்டிகள் நடந்தது. 40 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. சின்னாளபட்டி சேரன் வித்யாலயா பள்ளி அணி மாநில அளவில் 3ம் இடம் பெற்றது.திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்குநாடு கல்லுாரியில் நடந்த 17 வயதிற்கு உட்பட்ட மாணவர் ஹேண்ட்பால் போட்டியில் இப்பள்ளி அணி 3ம் இடம் பெற்றது.இவர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. தாளாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். முதல்வர் திலகம் முன்னிலை வகித்தார். மேலாளர் பாரதிராஜா வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் வெண்ணிலா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ