ஆற்றில் மூழ்கிய மாணவர் பலி
செம்பட்டி : வக்கம்பட்டி அருகே ஆரியநல்லுாரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செபஸ்தியார். இவரது மகன் டேனியல் 14. திண்டுக்கல் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் நண்பர்கள் சிலருடன் வீரக்கல் அருகே குடகனாற்று தடுப்பணை பகுதியில் குளிப்பதற்காக சென்றார். அங்கு தண்ணீரில் மூழ்கி பலியானார். செம்பட்டி போலீசார் உடலை மீட்டனர். இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரித்தார்.