மாணவர்கள் ஊர்வலம்
ஒட்டன்சத்திரம்: கிறிஸ்டியன் பொறியியல் கல்லுாரி , விருப்பாச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் பங்கேற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஆர்.டி.ஓ, கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு பாண்டியன், நகராட்சி கமிஷனர் ஸ்வேதா, கல்லுாரி முதல்வர் பரிமளா துவக்கி வைத்தனர். ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் கல்லுாரி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் பழநி ரோடு வழியாக ஒட்டன்சத்திரம் ரயில்வே ஸ்டேஷனில் முடிந்தது.