உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தடகளத்தில் வென்ற மாணவர்கள்

 தடகளத்தில் வென்ற மாணவர்கள்

நத்தம்: நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரியில் அண்ணா பல்கலை அளவிலான 17வது மண்டல தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற என்.பி.ஆர்., கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடந்தது. அண்ணா பல்கலை அளவிலான 17வது மண்டல தடகள போட்டிகள் நத்தம் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் நவ.22,23 ல் நடந்தது. இதில் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மின்னணுவியல் தகவல் தொழில்நுட்பவியல் மாணவி மதுமிதா நீளம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம், மும்முறை தாண்டுதல் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றார். கணினி அறிவியல் பொறியியல் துறை மாணவர் பாலமுருகன் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம், 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வென்றார். இவர்களுக்கு என்.பி.ஆர்., கல்லுாரி சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. கல்லுாரி முதல்வர் செல்வபெருமாள், உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ,பேராசிரியர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை