உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தரமற்ற ரோடு பணி; பா.ஜ., புகார்

 தரமற்ற ரோடு பணி; பா.ஜ., புகார்

சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் தரமற்ற ரோடு பணி நடப்பதாக பா.ஜ., நிர்வாகிகள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். சின்னாளபட்டி பேரூராட்சியில் 17 வது வார்டு உட்பட்ட சோமசுந்தரம் நகர் துவங்கி கருணாநிதி காலனி மாணவர்கள் விடுதி ஒமேசான் கோயில் ரோடு வரை தார் ரோடு பணிக்கு டெண்டர் சமீபத்தில் விடப்பட்டது. இதற்கான நிர்வாக அனுமதி பெறும் முன்பே ஒப்பந்ததாரர் ரோடு பணியை துவக்கியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் சின்னாளபட்டியை சேர்ந்த பா ஜ.,வினர் ஆர்.எஸ்.எஸ் பாரத பண்பாட்டு கேந்திர மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் தலைமையில் நேற்று பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். செயல் அலுவலர் இளவரசியிடம் புகார் மனு அளித்தனர். அதில், 95 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் தார் ரோடு பணிகளில் தரமற்ற ரோடு சீரமைப்பு நடப்பதாகவும், பொம்மையசாமி கோயில் தெருவில் பழைய சேதமடைந்த ரோட்டை அப்புறப்படுத்தாமல் அதனை சீரமைப்பதாகவும் மழைக்காலங்களில் தார் ரோடு உயரமாகும் சூழலில் மழைநீர் குடியிருப்புகளுக்குள் போகும் அபாய சூழலில் பணி நடப்பதாக குறிப்பிட்டுள்ளார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி