உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடையில் கொட்டியது கோடை மழை: 71. மி. மீ., பதிவு

கொடையில் கொட்டியது கோடை மழை: 71. மி. மீ., பதிவு

கொடைக்கானல்,:- கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டி தீர்த்ததில் 71. மி. மீ.,பதிவானது. குளு, குளு நகரான கொடைக்கானலில் சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயில் நிலவியது. இதனிடையே அவ்வப்போது வளிமண்டலத்தில் ஏற்படும் சுழற்சியால் மிதமான மழை பெய்து குளிர்ந்தது. வெயிலால் முக்கிய அருவிகளில் நீர்வரத்தும் குறைந்தது. நேற்று முன்தினம் இரவு 3 மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால் ரோட்டில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை 10:30 மணியிலிருந்து மாலை வரை இடைவிடாது மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது. நகரில் பனிமூட்டமும் சூழ்ந்தது. பயணிகள் விடுதிகளிலே முடங்கியதால் முக்கிய சுற்றுலா பகுதிகள் வெறிச்சோடின. கோடையில் வாட்டி வதைத்த வெயிலால் வாடிய கொடைக்கானல் கோடை மழையால் குளிர்ந்தது. இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பிரையன்ட் பூங்காவில் அதிகபட்சமாக 71. மி. மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ