ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கண்டனம்
திண்டுக்கல்: தஞ்சாவூர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி கொலையான சம்பவத்திற்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அருணன் கூறியிருப்பதாவது: வகுப்பறையில் புகுந்து கத்தியால் ஆசிரியரை குத்தி படுகொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த ஆசிரியர் இனத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆசிரியர்கள் அச்சத்துடன் பணிகளை மேற்கொள்ளும் நிலை உள்ளது. ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடமும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம். ஆசிரியர் ரமணியை படுகொலை செய்த மதன்குமாருக்கு உச்சபட்ச தண்டையை விரைந்து பெற்று தந்து இனி இதுபோன்ற சம்பவம் நடக்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரமணியின்,குடும்பத்தாருக்கு கூட்டமைப்பு சார்பில் ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறோம்.தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் விஜய் கூறியிருப்பதாவது: ஆசிரியர் கொல்லப்பட்ட நிகழ்விற்கு தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழகம்)கண்டனங்களை தெரிவிக்கிறது. ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டி அரசிற்கு கோரிக்கை வைக்கிறது என்றார்.