வாலிபருக்கு 30 ஆண்டு சிறை
திண்டுக்கல்:பழைய வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அஜித்குமார் 26. இவருக்கும் அப்பகுதி 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 2024ல் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தார். திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்கறிஞர் ஜோதி ஆஜராகினார். அஜித்குமாருக்கு 30 ஆண்டு சிறை , ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.