உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொட்டும் மழையில் கோயில் கும்பாபிேஷகம்

கொட்டும் மழையில் கோயில் கும்பாபிேஷகம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் ஐயப்பன் கோயிலில் சாரல் மழையோடு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.திண்டுக்கல் மேட்டுப்பட்டி மீனாட்சி நகரில் ஐயப்பன் கோயில் புதிதாக அமைக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பரிவார தெய்வங்களான வெற்றி விநாயகர், வெற்றிவேல் முருகன், ஸ்ரீ கருப்பண்ணசாமி, கருப்பாய அம்மாள், மஞ்சமாதா, நாகராஜா ஆகிய சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 4ம் கால பூஜையாக நேற்று காலை வேதபாராயணத்துடன் நிகழ்வு தொடங்கியது. தொடர்ந்து புனித தீர்த்தங்கள் அடங்கிய கலசங்களின் கடம் புறப்பாடு நடைபெற்று கோபுர விமானங்களில் மற்றும் சுவாமி விக்கிரங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடைபெற்றது. மழை பெய்து வந்த நிலையிலும் நுாற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் குடைகளுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்க புனித நீர் தெளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை