உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது- அமைச்சர் சக்கரபாணி பேச்சு

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது- அமைச்சர் சக்கரபாணி பேச்சு

நத்தம் : ''தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது''என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார்.நத்தம் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முன்பாக மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 100 நாள் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சரியாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசுவஞ்சிக்கிறது.தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு கூட மத்திய அரசு நிதி வழங்கவில்லை. இப்படிதொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசுவஞ்சிக்கிறது.தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி அனைத்தையும் நிறைவேற்றுகிறோம் என்றார்.வேடசந்தார்எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், மாவட்டபொருளாளர் க.விஜயன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், தர்மராஜன், மோகன், பழனிசாமி, பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்ஷா முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ராஜ்மோகன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !