நீர்த்தேக்கத்தில் குளிக்க சென்ற டிரைவர் மாயம்
கொடைரோடு : கொடைரோடு அருகே சிறுமலை ஆறு நீர்த்தேக்கத்தில் குளிக்க சென்ற டிரைவர் மாயமானதால் அவரை மீட்பு படையினர் தேடுகின்றனர்.கொடைரோடு அருகே ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் 32. பழம் விற்பனை செய்யும் வாகன டிரைவராக உள்ள இவர் ராஜதானி கோட்டை அருகே உள்ள சிறுமலை ஆறு நீர்த்தேக்கத்தில் நேற்று மதியம் இரு மகன்களுடன் குளிக்க சென்றார். ஆழம் குறைவான பகுதிகளில் மகன்கள் குளித்த நிலையில் தண்ணீர் மறுகால் பாயும் இடத்தின் அருகே படியில் நின்ற பிரகாஷ் மாயமானார். தீயணைப்பு மீட்பு படையினர் நீரில் விழுந்து இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடி வருகிறார்கள்.