உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  காத்திருப்புப் போராட்டம்

 காத்திருப்புப் போராட்டம்

திண்டுக்கல்: தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற ஒற்றைக்கோரிக்கை வலியுறுத்தி காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தை துவக்கி உள்ளனர். திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த போராட்டத்திற்கு சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் குழந்தைராஜ் தலைமை வகித்தார். கிழக்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த காத்திருப்புப் போராட்டத்திற்கு திண்டுக்கல் வட்டத் தலைவர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். பழநி : பழநி தாசில்தார் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம ஊழியர் சங்கம் சார்பில் கிராம உதவியாளர்கள், வட்டச் செயலாளர் மகுடீஸ்வரன் தலைமையில் கறுப்பு பேட்ஜ் அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைத்தலைவர் முத்தையா, வட்ட பொருளாளர் பெரியசாமி கலந்து கொண்டனர். நிலக்கோட்டை:: நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு கிராம உதவியாளர் சங்க உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட கிளை தலைவர் பிரபு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் துரைப்பாண்டி முன்னிலை வகித்தார். அரசாணை எண் 625-ன்படி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்படும் வரை கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடைபெறும் என: தெரிவித்தனர்.: அலுவலக பணியாளர்களும் இவர்களுக்கு ஆதரவாக கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை