உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் இல்லை செயற்கை புல் ஹாக்கி மைதானம்

திண்டுக்கல்லில் இல்லை செயற்கை புல் ஹாக்கி மைதானம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் செயற்கை புல் ஹாக்கி மைதானம் (ஆஸ்ட்ரோ டர்பு) அமைக்க வேண்டுமென்ற முன்னாள், இந்நாள் ஹாக்கி வீரர்களின் கோரிக்கையை துணை முதல்வர் உதயநிதி கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் செயற்கை புல் ஹாக்கி மைதானம் உள்ளது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் புல் ஹாக்கி மைதானம் இல்லை. திண்டுக்கல் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேசிய, மாநில ஹாக்கி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுகின்றனர். இவர்களுக்கு சரியான மைதானம் இல்லாததால் வெற்றி வாய்ப்புகளை இழந்து வருகின்றனர். இதனால் கல்லுாரி, பள்ளி விளையாட்டு மைதானங்களை நாட வேண்டியுள்ளது. இதுபற்றி பலமுறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. திண்டுக்கல்லிற்கு வந்துள்ள துணை முதல்வர் உதயநிதி திண்டுக்கல்லில் செயற்கை புல் ஹாக்கி மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாவட்ட வீரர்களின் ஒட்ட மொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ