உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காரை சேதப்படுத்திய மூவர் கைது

காரை சேதப்படுத்திய மூவர் கைது

கொடைக்கானல்,: கொடைக்கானல் சுற்றுலா வந்த பயணியின் காரை தாக்கிய மூவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.திருச்சியை சேர்ந்தவர் மனோ சித்தார்த்தன் குடும்பத்தினருடன் மே 23 கொடைக்கானல் வந்து திரும்பு கையில் வெள்ளி நீர்வீழ்ச்சி பெருமாள்மலை இடையே உள்ள பழக்கடையில் பழங்கள் வாங்க சென்ற போது அருகில் கடையிலிருந்த நபர்கள் காரை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.காரை எடுப்பதாக மனோ சித்தார்த்தன் கூறுகையில் ஆத்திரம் அடைந்த பெருமாள்மலையை சேர்ந்த முகமது அயுப் கான் 35,முத்துராமலிங்கபாண்டியன் 17, சாமகாட்டுபள்ளத்தைச் சேர்ந்த சிரஞ்சிவி 16, ஆகியோர் தகாத வார்த்தையில் பேசி கார் கண்ணாடியை உடைத்தனர். இது குறித்து புகார் அளித்த நிலையில் மூவரையும் கொடைக்கான போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை