ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த மூவர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் தெய்வசிகாமணிபுரத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் தேவ சதீஷ்குமார் 45. இவர் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்ற போது சவாரி கேட்பது போல் வந்த மரியநாதபுரத்தை சேர்ந்த சரவணக் குமார் 40, நல்லேந்திரபுரத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ண கண்ணன் 23, ரவுண்ட் ரோடு சேர்ந்த அஜித் சுரேந்தர் 25, மூவரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.3200 ஐ பறித்து சென்றனர். வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மூன்று பேரையும் கைது செய்தனர்.